ஜெயலலிதா வாழ்க்கை படம் எடுக்க சசிகலா உதவுவார்: பிரபல திரைப்பட இயக்குநர் நம்பிக்கை

Must read

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல தெலுங்குப பட இயக்குநரும் தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ்.

இது குறித்து அவர், “ஜெயலலிதா பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன.  அவர் நடித்த திரைப்படங்கள், தமிழக முதல்வராக அவரது செயல்பாடு, அகில இந்திய அளவில் அவரது அரசியல் பங்களிப்பு எல்லாமும் புத்தகங்களாக வந்திருக்கின்றன.

அதே நேரம், அவரது வாழ்க்கை குறித்தும் சுவாரஸ்யமான விசயங்களை வெள்ளித்திரையில் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கும்” என்றார்.

மேலும், “ இந்தப் படத்தின் திரைக்கதையை இன்னும் நான் எழுத ஆரம்பிக்க வில்லை. இது குறித்து ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச்செயலாளருமாகிய சசிகலாவிடம் ஆலோசனை செய்யவும் விரும்புகிறேன். அவர் உதவுவார் என்று நம்புகிறேன்” என்றார்.

 

More articles

Latest article