தலைவராகிறார் குஷ்பு?

Must read

 

சென்னை,

யாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார்.

நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டி யிட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி நடைற இருக்கிறது. இதில் போட்டியிட பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் பலர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்  தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை நடத்தியதாக  அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இதில் குஷ்புவை தலைவராகவும் நிறுத்தவும், மற்ற பதவிகளுக்கு போட்டியிடும் நபர்களை தேர்வு செய்து வருவதாகவும், பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் பெற்றி பெற்று குஷ்பு  தலைவராவார் என்று விஷால் அணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article