மீண்டும் சர்ச்சை பாடல்! “பீப்” சிம்புவின் அடுத்த அட்ராசிட்டி

Must read

 

பெண்களை கொச்சைப்படுத்தும் அருவெறுப்பான “பீப்” படால் பாடி, கடந்த வருடம் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

பிறகு ஒருவழியாக அந்த சர்ச்சை அடங்கியது. இந்த நிலையில்,  மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சிம்பு.

தற்போது இவர் நடித்துவரும் திரைப்படம், “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”. இந்த தலைப்பை “ஏ.ஏ.ஏ.”.. அதாவது “ட்ரிபிள் ஏ” என்று வைத்து சர்ச்சையை கிளப்பினார் சிம்பு.

இப்பது இந்தப் படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங் வெளியாகி இருக்கிறது. இதிலும் சர்ச்சை. இந்தப்பாடலில் வரும்  “இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணா போதும்” என்ற வரி, பெண்களை கொச்சைப்படுத்துகிறது என்று புகார் கிளம்பியிருக்கிறது.

ஹூம்..  ஆடிய காலும் பாடிய வாயும் மட்டுமல்ல… பாழ்பட்ட மூளையும் கூட சும்மா இருப்பதில்லை!

 

 

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article