டில்லி

நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.  இது குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சக உதவி இயக்குநர் பூர்ணிமா அந்த அறிக்கையில்,

”கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திடடத்தை தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தின் மூலம் நாடெங்கும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.   மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் அன்று பல பிரதேசங்கள் திறந்த வெளி கழிப்பறை இல்லா இடங்களாக அறிவிக்கப்பட்டன. 

கடந்த 15 ஆம் தேதியில் இருந்து நாளை அதாவது அக்டோபர் 2 வரை தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகக் குப்பையிலா இந்தியா என்னும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.   இந்த பிரச்சாரம் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது” 

என்று அறிவித்துள்ளார்.