டில்லி:
தீர்ப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்த ஒய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரளாவை சேர்ந்த இளம்பெண் செளமியா 2011ம் ஆண்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில், தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திது தண்டனையை குறைத்தது.
இந்த தண்டனை குறைப்பை கடுமையாக விமர்சித்து முகநூலில் மார்கண்டேய கட்ஜு பதிவிட்டிருந்தார்.
இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கட்ஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நவம்பர் 11ஆம் தேதி நேரில் ஆஜராகி உச்ச நீதிமன்றம் எந்த வகையில் தவறாக உத்தரவு வழங்கியுள்ளது என்பது குறித்து விளக்கும் படி நீதிபதி ரஞ்சன் கோஹாய் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.