ஜி.எஸ்.ஷா அறிக்கை: கர்நாடகத்துக்கு நிவாரணம்! சித்தராமய்யா

Must read

பெங்களுர்,
காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப  குழு ஜி.எஸ்.ஷா அறிக்கை கர்நாடகத்துக்க சிறிதளவு நிவாரணத்தை தரும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார்.
காவிரி பிரச்சினை குறித்து, உச்ச நீதி மன்ற உத்தரவுபடி,  தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆய்வு செய்த ஜி.எஸ். ஜா தலைமையிலான காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவினர், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நேரில் ஆய்வு செய்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர்.
மத்திய குழு சுப்ரீம் கோர்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
இரண்டு மாநிலங்களிலுமே வறட்சி நிலவுகிறது.  தமிழகத்தில் ஒரு போக சம்பாவுக்கு மேலும் தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 133 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதோடு, தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக 22 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.  மே மாதம் வரையிலும் குறைந்தது 143 TMC தண்ணீர் தேவை. மேட்டூரில் 30 TMC தண்ணீர் இருக்கிறது. கர்நாடகாவில் 32 TMC தண்ணீர் உள்ளது.  கர்நாடகாவில் 42 தாலுகாகள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலைகள் செய்துள்ளனர். பாசன முறை நவீனப்படுத்தப்பட்டால்தான் தண்ணீரை சேமிக்க முடியும்.
 
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகம், கர்நாடகாவில்  விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தின் கடலோ பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. இதனால் குடிநீருக்கும், சாகுபடிக்கும் மேட்டூர்  அணையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் மேலாண்மையில் புதிய முறையை செயல்படுத்த வேண்டும் என்றும், விவசாயத்துக்கு சொட்டு நீர் பாசன முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ritha
 
இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா,
காவிரி விவகாரத்தில் தொழில்நுட்பக் குழுவினரின் அறிக்கை தாக்கல் செய்திருப்பது, கர்நாடகத்திற்கு நிவாரணம் தரும் என்றார்.
பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘காவிரி தொழில்நுட்ப உயர்மட்டக் குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கள யதார்த்தங்களை நேரில் பார்த்து ஆய்வு‌ செய்து தொழில்நுட்பக் குழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
இந்த அறிக்கையானது கர்நாடகத்துக்கு சிறிய நிவாரணத்தை தரும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article