images-1
பாட்னா:
பீகாரின் பாட்னா இரயில்வே நிலையம்தான் இலவச வைஃபை மூலம் இணையதள தேடலில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. ஆனால் பெரும்பாலான பயனாளர்கள் தேடுவது ஆபாச வலைதளங்களைத்தான் என்று இரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் இரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு இலவச வைஃபையை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களையும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் வீடியோக்களையும் தரவிரக்கம் செய்வதால் இணையவேகம் வெகுவாக குறைந்துவிடுவதாகவும் எனவே இணைய வேகத்தை 1 ஜிபியிலிருந்து 10 ஜிபிக்கு உயர்த்த இரெயில்டெல் முடிவுசெய்துள்ளதாகவும் தெரிகிறது.
யூடியூப் மற்றும் விக்கிபீடியா ஆகிய தளங்களும் பயனாளர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. இலவச வைஃபை பயன்பாட்டில் பாட்னாவுக்கு அடுத்த இடத்தில் முறையே ஜெய்பூர், பெங்களூரு மற்றும் டெல்லி இரயில் நிலையங்கள் வருகின்றன.
rail
இலவச வைஃபை திட்டம் கடந்த மாதம் பீகாரின் பாட்னா, ஆந்திராவின் விசாகபட்டணம் மற்றும் ஜார்கண்ட்டின் ராஞ்சி ஆகிய இரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டது. இதுவரை 23 இரயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து இரயில் நிலையங்களும் இலவச வைஃபை வசதி பெற்றுவிடும் என்று இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இரயில்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.