கோவா:
ர்வதேச சந்தையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனக் கூறப்படும் IMF ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கியது.
இக்கூட்டமைப்பின் கீழ் இந்த நாடுகளின் வளர்ச்சி பாதை, நிதியுதவி, நலத் திட்டங்களை ஆகியவற்றை வகுக்க உதவிடும் வகையில் பிரிக்ஸ் நியூ டெவலப்மெண்ட் பாங்க் சில மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு இதன் தலைமையகத்தைச் சீனாவிலும், அதன் தலைவராகக் கே.வி.காமத் என்ற இந்தியரையும் இக்கூட்டமைப்பு நியமித்தது.
brics-bank
இந்நிலையில் தற்போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திற்கு இணையாக எந்த நாடுகள், சந்தைகள் தலையீடு இல்லாத ஒரு கிரேடிட் ஏஜென்சி-ஐ உருவாக்க பிரிக்ஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புதிய கிரேடிட் ஏஜென்சி சந்தை விதிகளுக்கு ஏற்ப, சர்வதேச சந்தையை வலிமைப்படுத்தும் ஒரு வடிவமாக இருக்கும்.
கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக உருவாக்கப்படும் கிரேடிட் ஏஜென்ஸி பற்றி மாநாட்டின் முடிவுரையில் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்தக் கிரேடிட் ஏஜென்சியின் வடிவம், செயல்முறை மற்றும் செயல்பாடுகளைப் பற்றி நியூ டெவலப்மெண்ட் வங்கி தலைவர் கே.வி.காமத் கூறினார்.
credit: www.goodreturns.in