டில்லி,
ற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினை பற்றி விமர்சித்த உச்ச நீதி மன்றமும் தேச விரோதியா என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கும் நிலையில், தற்போதும் உச்ச நீதிமன்றத்தை “தேச விரோதி” என்பீர்களா? என ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்.
rahul gandhi
கடந்த 8ந்தேதி முதல் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும், பழைய நோட்டுக்கு பதிலாக புதிய நோட்டு கிடைக்காமலும், சில்லரை தட்டுபாட்டாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் காரணமாக மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களிலும், கீழ் நீதிமன்றங்களிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கு தடை ஆணை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
supreme
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் தடையாணை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இதற்கு பதில் அளித்திருந்தது.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை கொள்ளும் உச்சநீதிமன்றம், இந்த மோசமான நிலைமை எப்போது மாறும்? அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? என மத்திய அரசை சரமாரரியாக கேள்விகள் கேட்டது.
இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில்,
“இப்போது உச்ச நீதிமன்றத்தையும் தேச விரோதி என அரசு அழைக்குமா?” என அரசை கேள்வி கேட்டிருக்கிறார். மேலும், அரசு முறையாக தயாராகவில்லை எனும் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் அறிக்கை ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எல்லாம், தேச விரோதிகள் என அரசால் பயிற்றுவிக்கப்படும் வேளையில், ராகுல் காந்தி தன் எதிர்ப்பை இப்படி பதிவு செய்திருக்கிறார்.