“அமித்ஷா ஆதரவில் நல்ல நோட்டு மாற்றம்!”:மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய நண்பர் ஓஷா

Must read

 
குஜராத் மாநில பாஜகவில் முன்னணி தலைவர்களுள் ஒருவாரக விளங்கியவர் யாதின் ஒஷா. குஜராத் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருந்த இவர், பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்து அமித்ஷாவுக்கு சட்டரீதியான வழி காட்டி யாகும் அளவுக்கு உயர்ந்தார்.  அதோடு, குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்தார்.
பிறகு கட்சிதலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்.
கடந்த 8ந்தேதி ரூபாய் நோட்டு செல்லாது என மோடி அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை கடந்த 17-ம்தேதி தன் முகநூலில் எழுதியிருக்கிறார் ஓஷா.
modi-1
இக்கடிதத்தை அப்படியே, இந்தியா சாம்வாத் என்கிற இணைய இதழ் வெளியிட்டது. அதை தமிழில் மொழி பெயர்த்து தன் முகநூலில் வெளியிட்டிருக்கிறார் ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன்.
அந்தக்கடிதம்:
பெறுநர்
ஸ்ரீநரேந்திரமோடி
மதிப்பிற்குரிய இந்தியப்பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூடெல்லி
அன்புள்ள நரேந்திரபாய்
இந்தக்கடிதம் கிடைக்கும் வேளையில் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்ததீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்துமுன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு வந்தது முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.
உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்தவன் என்ற முறையில் எனக்கு உடனே பொறி தட்டியது. நாட்டின் 50 சதவீதக் கருப்புப்பணம் வைத்திருக்கும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபர்களுக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றியே ஒருநாள் முழுவதும் சிந்தித்து, விசாரணைகள்நடத்தியபிறகுஎனக்குக்கிடைத்தவிவரங்கள்அதிர்ச்சியளிக்கக்கூடியவை.இந்தவெகுஜனநோக்கிலானநடவடிக்கையின்மூலமாகஇந்தநாட்டுமக்களைநீங்கள்முட்டாள்களாக்கிவிட்டீர்கள்.
உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களை யும்  அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்கு வதற்காகத்தான். அமித்ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவுமுதல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதைதெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட‘வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோபதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கமிஷனுக்கு கருப்புப்பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரியவரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச்சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதைஎண்ணி 63 லட்சரூபாய்களைக்கொண்டஒருபையைக்கொடுப்பார்கள். இந்த வீடியோவை வெளியிட்டுவிடலாம்.ஆனால்நீங்கள்அமித்ஷாவின்சகாக்களைவிட்டுவிட்டுவீடியோவில்இருப்பவர்களைத்தண்டிப்பீர்கள்.ஆயினும்நான்அந்தவீடியோவைஇரண்டுஅல்லதுமூன்றுமூத்தஊடகவியலாளர்களுக்குக்காட்டிவிட்டுஉங்களுக்குதகவல்அனுப்புவேன்.ஒன்றுக்குஇரண்டுமுறைஅந்தவீடியோவைச்சோதித்துவிட்டுநான்சொல்வதுஉண்மைதானஎன்றுஅவர்களிடம்நீங்கள்கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.
கூட்டுறவுவங்கிகளில்பெரியஅளவில்நடைபெற்றமுறைகேடுகளையும், சட்டவிரோதச்செயல்களை யும்பற்றி விவரம்அ றிந்தபின்தான்நேற்றுநீங்கள்தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்தயாரும் நம்பமாட்டார்கள். உங்களுடையஎதிரிகூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்  தனத்தையும் மதிக்கிறார்கள். அ ந்த முக்கியாமான அம்சத்தினைக்குறித் துநீங்கள்யோசிக்காமல் இருந்திருக்கமாட்டீர் கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக் கையின் முழுவரைபடத்தையும் ம னதில்கொள்ளாமல் நீங்கள் ஒருசெயலில் இறங்கமாட்டீர்கள் என்றுஉங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கை யினால் விளையப்போகும் அனைத்து சாதகபாதகங்களும் உங்கள்சிந்தையில் பிரகாசமாக இருக்கும். நான் மிகுந்தமரியாதையுடன் சொல்ல விரும்புவதுஎன்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின்முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. ஏனெனில், குஜராத்தில்உள்ள அனைத்துமாவட்ட கூட்டுறவுவங்கிகளும் பிஜேபி ஆதராவாளர்களின்கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன .நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணிவரை இந்தவங்கிகள் 500 மற்றும் 1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றியிருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லாவங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவுமதிப்புடைய ரொக்கம்பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்றவிவரத்தை ரிசர்வ்வங்கி மூலமாகக்கேட்டிருக்கிறீர்கள். அந்தவிவரங்களை வைத்து நான்சொன்னது உண்மைதானாஎன்று நீங்களேஉறுதிசெய்துகொள்ளுங்கள். நான்சொன்னது தவறுஎன்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்பேன்.
amithsah
சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்துவிட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்குமுன்பே உங்களது நடவடிக்கைகுறித்து தெரிவிக்கப்பட்டு விட்டதுஎன்று இந்தியமக்களிடையேநிலவும் ஏதாவது சந்தேகத்தைப் போக்குவதற்கு, நீங்கள் ஒருகோடிரூபாய்க்கு மேல்பணம்இருப்பதாக அறிவித்தவர்களைப்பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடவேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில்நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோஅ ல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்கமாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத்தெரியும். அப்படி அறிவிக்கவில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.
4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில்நிற்கும் மக்களைப்பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச்ரோவர்காரையோ அல்லது அதன்உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏடிம் அல்லது வங்கிமுன்வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப்பணத்தைப் பதுக்கி வைத்திருப்ப வர்கள், மேற்கூறியகார்கள் வைத்திருப்பவர்களிடம் அதுஇல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத்தவிர, ரியல்எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட்பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத்தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசுஅதிகாரிகள் எவ்வளவுபணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டுமக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர்.
மேற்கூறியவர்களைப் பற்றியவிவரங்கள் இந்தநாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப்பணத்தினை பதுக்கிவைத்திருக்கும் 10 அல்லது 12 தொழிலதிபர்கள் முன்னரேஉங்களின் நடவடிக்கை குறித்துஉங்களிடமிருந்து தகவல்பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். ஒருலட்சம் கோடிரூபாய்க்கு மேல்மதிப்புள்ளஉங்களிடம்பெற்றுக்கொண்டு 7000 பேருக்குக்கூட வேலைவாய்ப்பு களை உருவாக்காமல் இருக்கும்இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கிவரிசைகளில் சிறுதொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகளாவது தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். அரசின் இணையதளத்தில் 300 முதல் 400 கோடிவரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத்தொகைகள் அவர்களின் வருமானவரித் தாக்கல்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியேவந்தவருமான அளவுடனோ ஒத்துப்போக வில்லையெனில், வருமானவரித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ளவிரும்புவார்கள். நவம்பர் 8 இரவு எட்டுமணிக்கு முன்எவ்வளவு தங்கத்தையும், வைரத்தையும் யார் வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தவேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உச்சாணிக்கொம்பில் இருக்கும் வெகுசிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்கினார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க உதவும். உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்கு உரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்களிடம் உண்மையான,
யாதின் ஓசா

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article