டெல்லி:

ஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்ததத்தில் முறைகேடு நடெபற்றுள்ளதா,  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா உள்பட பலர் குற்றம் சாட்டினர்.

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான  போர் விமானங்களை கொள்முதல் செய்வதில், அரசின்  கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும்,  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், மத்தியஅரசின் ஆவனங்களை பெற்ற உச்சநீதி மன்றம், ரஃபேல் முறைகேடு வழக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்று கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், பிரபல பத்திரிகை ஒன்றில், ரஃபேல் தொடர்பான ஆவனங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் தீர்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை முன்னாள் பாஜக அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிரபல வழக்கறினர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.