புதுடெல்லி:
பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு மும்பை பகுதியில் இருக்கும் ஜூஹூவில் உள்ள நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,யுமான சன்னி தியோலின் பங்களாவை, அவர் பெற்ற கடனுக்காக ஏலம் விடுவதாக பாங்க் ஆஃப் பரோடா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அஜய் சிங் தியோல் என்ற சன்னி தியோலின் பங்களாவை ஏல விற்பனை அறிவிப்பு தொழில்நுட்ப காரணங்களால் திரும்பப் பெறப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? கேள்வி எழுப்பியுள்ளார்.