டெல்லி: கடந்த ஆண்டு 46,643 உள்துறை அமைச்சக ஊழியர்கள்மீது ஊழல் புகார் பதியப்பட்டு உள்ளதாக, மத்திய விஜிலன்ஸ் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்து அவருகிறார். அவரது துறையில், அதிக அளவில் ஊழல் புகார்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அதிக ஊழல் புகார்கள் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீதும், அதைத் தொடர்ந்து ரயில்வே மற்றும் வங்கிகள் மீதும் பதிவாகியுள்ளன.  மொத்தத்தில் மத்திய  ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) கடந்த ஆண்டுகளில் 1,51,203 புகார்களைப் பெற்றது, அவற்றில் 46,643 உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராகவும், 10,580 ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராகவும், 8,129 வங்கி அதிகாரிகளுக்கு எதிராகவும் வந்துள்ளன.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், கடந்தாண்டு (2022)  மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக 1,15,203 ஊழல் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்களில், அதிகபட்ச புகார்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா   உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிரானது என்றும், 46,643 ஊழல் புகார்கள் உள்துறை அமைச்சகத்தின்மீது வந்துள்ளன என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து 2வது இடத்தில், ரயில்வே நிர்வாகம் சிக்கியுள்ளது.  மத்திய  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தில்,  ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக 10,580 புகார்கள் பதிவாகி உள்ளது.

இதையடுத்து 3வது இடத்தில் வங்கி நிர்வாகங்கள் உள்ளன. வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

டெல்லி பிராந்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 7,370 புகார்களும்,

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,710 புகார்களும் ,

நிலக்கரி அமைச்சக ஊழியர்கள் மீது 4,304 புகார்களும்,

பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் மீது 2,617 புகார்களும்,

நிதி அமைச்சக ஊழியர்கள் மீது 1,202 புகார்களும், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மீது 987 புகார்களும்

நேரடி வரிகள் வாரிய ஊழியர்கள் மீது 2,150 ஊழல் புகார்களும்,

ராணுவ அமைச்சக ஊழியர்கள் மீது 1,619 புகார்களும்,

தொலைத்தொடர்புத்துறை ஊழியர்கள் மீது 1,308 புகார்களும் ,

வந்திருப்பதாக மத்திய  ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) கூறியுள்ளது.