சென்னை

ருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 30க்கு பிறகு நடந்த மாணவர் சேர்க்கை செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. 

தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30-தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மகாராஷ்டிரா, பீகார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30  ஆம் தேதிக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.