சென்னை:  தமிழ்நாட்டில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை, தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் மட்டும் பதின் பருவத்தில் உள்ள 6 மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்டு இறந்துபோயுள்ளனர். இந்த நிகழ்வுகள் மாநில அரசின் நடவடிக்கை மீதும், காவல்துறையினரின் நடவடிக்கை மற்றும் கல்வி நிலையங்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்தும், பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளன.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில்  தங்கியிருந்த 2 மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதை கண்ட மற்ற மாணவிகள் அவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் அந்த மாணவிகள்  மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….