சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

வரி முறைகேடு தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அவரது உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தாணு, நடிகர் சூர்யாவின் உறவினர்கள் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி எராளமான ஆவனங்களை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

ஆனால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இன்னும் வருமான வரித்துறை சோதனை முடியவில்லை. இன்று  3வது  நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமானவரி துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அத்துடன் நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.