வாரணாசி:
கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாநிலங்களுக்கு சென்ற ஏராளமானோர் ஆங்காங்கே சிக்கி உள்ளனர்.  அவர்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பலர், ஊரடங்கால் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்கள் 3 பேருந்துகள் நாளை தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்  கடந்த மாதம் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு மே மாதம் 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்குக்கு முன்னதாக அறிவித்தது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களுக்கு ஆன்மிக  சுற்றுலா சென்றிருந்தனர். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டால், அவர்கள் தமிழகம் திரும்ப முடியாமல்,   வாரணாசியில் சிக்கிகொண்டனர்.
அவர்களை மீட்கக்கோரி தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும்  அங்குள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.  அவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள் என்பதால்,  அவர்களை தமிழகத்துக்கு அனுப்பும் முயற்சியை உ.பி. அரசு எடுத்து வந்தது.
அதைத்தொடர்ந்து, அவர்கள் 124 பேரும் 3 அரசு பேருந்துகள் மூலம் தமிழகத்திற்கு இன்று புறப்பட்டு நாளை வந்தடைகின்றனர். பின்னர்  சென்னையில் இருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில் பலர்  திருச்செந்தூர்,  மதுரை,  ஈரோடு, நாகை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.