டில்லி:

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களில்  மீது நடத்தப்பட்ட ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத குழுவினரின் தற்கொலைப்படை தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் மக்கள் ஆவேசமாக கூறி வருகிறார்கள்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது, ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்ற தற்கொலை பயங்கரவாதி சுமார் 350 கிலோ அளவிலான பயங்கர வெடிப்பொருட்களை நிரப்பிய கார் மூலம், மோதி வெடிகுண்டை வெடிக்கச்செய்து  பெரும் விபத்தை ஏற்படுத்தினான்.

இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் தூள் தூளாகவெடித்து சிதறியது. அதனுள் பயணம் செய்த வீரர்களின் உடல்களும் அடையாளம் தெரிய அளவுக்கு சிதறியுள்ளன. இந்த கொடூரமான குண்டு வெடிப்பில் 41  சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.

நாட்டுக்காக தங்களது  உயிரைத்தியாகம் செய்த வீரர்கள் எந்தெந்த மாநிலங் களை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, அசாம்-1,  பீகார்-2, இமாச்சல பிரதேசம்-1, ஜம்மு காஷ்மீர்-1, ஜார் கண்ட்-1, கேரளா-1, கர்நாடகா-1, மத்திய பிரதேசம்-1, மகாராஷ்டிரா-2, ஒடிசா-2, பஞ்சாப்-4, ராஜஸ்தான்-5, தமிழ்நாடு-2, உத்தரபிரதேசம்-12, உத்தர்காண்ட்-3, மேற்கு வங்கம்-2, ஆக மொத்தம் 41 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

அதிக பட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தை  21 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள னர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரோஹிதஷ் லம்பா, பாகிரத் சிங் மற்றும் ஹேம்ராஜ் மீனா அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரோஹிதஷ் லம்பா ஷாபுராவிற்கு அருகில்  உள்ள கோபிந்த்புரா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மனைவியும் இரண்டு மாத குழந்தையும் உள்ளனர். ரோஹிதஸ் சமீபத்தில்தான் அவர் சொந்த ஊருக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு  திரும்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பம் கண்ணீரில் மிதக்கிறது. மற்றொரு வீரரா பாகிரத்  சிங், டோல்பூலி அருகில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தை சேர்ந்தவர்.

குண்டுவெடிப்பில் பலியான ராஜஸ்தான் வீரர்கள் பாகிரத் சிங், ஹேம்ராஜ் மீனா

இவர்களின் வீர மரணம் குறித்து கூறிய மாநில முதல்வர் அசோக் கெலாட், இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஆர்பிஎப் ஜவான்கள் பலர் உயிரிழந்ததுள்ளனர்.  கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.  இத்தகைய கொடூரம் தோற்கடிக்கப்பட வேண்டும். தியாகிகளின் குடும்பங்களுடனான  சோகத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்.. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேயும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அதில், பயங்கரவாதிகளின் இந்த கொடூரமான  தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், தான் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கும், காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் துணை நிற்பேன் என்றும்…   நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், பயங்கரவாதத்தக்கு எதிராக போராடுவோம் என்று கூறியுள்ளார்.