உளவுத்துறையின் தோல்வியே புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த தமிழக வீரரின் சுப்பிரமணி தந்தை குற்றச்சாட்டு

Must read

டில்லி:

ளவுத்துறையின் தோல்வியே புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று  உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியின்  தந்தை குற்றம் சாட்டி உள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரரின் தந்தை, மத்திய அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். அவனது இழப்பு ஈடு செய்ய முடியாது என்று கூறி உள்ளார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 என்று அரசு அறிவித்து உள்ளது.

பலியான வீரர்களின் பெற்றோர்கள்,  குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஊரைச்  சேர்ந்தவர்கள் கண்ணீர் மல்க சோகத்தில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த கோரத் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் பலியானதாக கூறப்பட்டது. அதில்,  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்ரமணி.  தூத்துக்குடி அருகே சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியனின் என்று கூறப்படுகிறது.

அவரது இறப்பு செய்தி கேட்டு… சுப்ரமணியனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டமே சோகமடைந்து உள்ளது.

சுப்ரமணியனுடன், மற்றொரு தமிழக வீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அரியலூர் மாவட்டம் கார்குடியை ஜெயச்சந்திரன் என்பது தெரிய வந்ததுள்ளத.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி சுப்பிரமணியின் தந்தை இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்விதான் என்று குற்றம் சாட்டினார்.

இந்த  தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தவறியதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது,அவனது இழப்பு ஈடு செய்ய முடியாது என்றும், இது  உளவுத்துறையின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என்றும் கூறி உள்ளார்.

எதிர்காலத்திலாது இதுபோன்றி நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் வேறு கோணத்தில் இருந்து இதை சந்திக்க வேண்டும் என்றவர்,  தங்களது மகன் இறந்தது குறித்து அரசிடம் இருந்து முறையாக  அறிவிப்பு வரவில்லை  என்றவர், சுப்பிரமணியின் நண்பர்கள் மூலமே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article