கருணாநிதியை ஆலோசித்து ஆர்.கே. நகர் வேட்பாளரை அறிவிப்போம்!: மு.க. ஸ்டாலின்

மிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டக்கூடிய வகையில் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடிய கட்சிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெளிவித்துள்ளார்.

இன்று  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த அவர் தெரிவித்ததாதவது:

கேள்வி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார்?

ஸ்டாலின:  தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இரு நாட்களாக நடைபெறுகிறது. நாளை அவற்றை பரிசீலனை செய்ய இருக்கிறோம். விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களை அழைத்து  நேர்காணல் நடத்தவுள்ளோம். அதன் பிறகு தலைவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும், பொதுச்செயலாளர் அன்பழகனிடமும் கலந்து  ஆலோசித்து இரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம்.

கேள்வி: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன?

ஸ்டாலின்: ஏற்கெனவே தி.மு..க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உட்பட பல கட்சிகள்  ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

கேள்வி: எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள மக்கள் நல கூட்டணியின் ஆதரவு அளிப்பார்களா?

ஸ்டாலின்:: இது நல்ல கருத்து. ஏற்புடைய கருத்து. குறிப்பாக இன்றைக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கக்கூடிய சசிகலா தலைமையில் இருக்கக்கூடிய ஒரு பினாமி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, , இந்த பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டும் வகையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடந்திட வேண்டும். அதற்காக பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இன்னும் சில கட்சிகள், அவை எந்த கட்சியாக இருந்தாலும், அவை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கு ஆதரவு தெரித்தால்  நிச்சயமாக திமுக அதை வரவேற்கும். இதை அவர்களுக்கு நான் விடுத்திருக்கக்கூடிய அழைப்பு!

கேள்வி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக, நேர்மையாக செயல்படும் என்று கருதுகிறீர்களா?

ஸ்டாலின்: நியாயமாகத்தான் செயல்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு உகந்தது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கக்கூடிய ஜார்ஜ், இப்போதுள்ள பினாமி ஆட்சிக்கு எந்த வகையில் எல்லாம் துணை நிற்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். குறிப்பாக, கூவத்தூரில் 122 பேர் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அவருடைய தலைமையில் தான் நடந்திருக்கிறது. தவிர,, சட்டமன்றத்தில் இருந்து எங்களை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் போடுவதற்கு, அவருடைய தலைமையில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகள் தான் காரணமாக இருந்தார்கள்.

ஆகவே, அவர் கமிஷனராக இருந்தால், நிச்சயமாக நீங்கள் கேட்பது போல இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு அது ஏதுவாக அமைந்திட முடியாது. அதனால் தான் அவரை உடனடியாக, மாற்ற வேண்டும்.”

–    இவ்வாறு கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்.

 


English Summary
stalin told rk nagar dmk canditate will announce after consulting with karunanidhi