15ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

Must read

சென்னை:

வரும் 15ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இதில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக சசிகலா சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது இவர் சிறையில் இருக்கும் நிலையில் ஆட்சி மன்ற குழு கூடுகிறது. அன்றைய தினமே அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அ.தி.மு.க எம்எல்ஏ.க்கள் அன்றைய தினம் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனன் தலைமையிலான புதிய ஆட்சி மன்ற குழுவை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதோடு சசிகலா சமர்ப்பித்த கடிதத்தில் மீது தேர்தல் கமிஷன் விரைவில் தனது முடிவை அறிவிக்கவுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர் அணியில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article