கோவை: கோயமுத்தூரில் இருந்து திருப்பதிக்கு சேலம் வழியாக இன்றுமுதல் ரயில் இயக்கம்படும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஜூலை 9 ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.   அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

ஜூலை 10 முதல் சனி, திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய 4 நாட்களில் 2.55 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் அன்றிரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில் இது சேலம், திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.