சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  பெற சென்னையில்  24ந்தேதி முதல் முகாம் நடைபெறும் என்றும் நாளைமுதல் டோக்கன் விநியோகம் நடைபெறும் என்றும்  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். மகளிர் உரிமைத்தொகை’ பெற  “வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்-

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15- ஆம் தேதி தொடங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின்  அறிவித்தார். அதைத்தொடர்ந்து, பயனர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு,  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாளை (ஜூலை 20ந்தேதி) முதல், மகளிர் உரிமைத் தொகைahd  ரூ.1,000 பெற தகுதியானவர்களுக்கு டோக்கன்  மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனர்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது என்றார்.

 கலைஞர், மகளிர் உரிமைத்தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளது. வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் பணி நாளை முதல் தொடங்குகிறது.

யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் பலகை வைக்கப் பட உள்ளது என தெரிவித்தார்.

 “சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது; “முதல் கட்டமாக 98 வார்டுகளிலும், இரண்டாம் கட்டமாக 102 வார்டுகளிலும் முகாம் நடைபெற உள்ளது”

நாளை முதல் தெருவாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். டோக்கன் வழங்கப்படும், அதற்கு ஏற்ப அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் பொதுமக்கள் வந்தால் போதும். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும்.

நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்; பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள 1800 பயோ மெட்ரிக் கருவிகளை வட்டார துணை ஆணையாளர் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்  ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அவருடன்  கூடுதல்  ஆணையாளர் (வருவாய்(ம)நிதி)) திருமதி ஆர்.லலிதா, இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் சமீரன்,  தெற்கு வட்டார துணை ஆணையாளர் அமித்,
உதவி ஆணையாளர் (பொ.நி.(ம)ப.) .சூரியபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.