‘கண்ணடி’ நாயகி பிரபலத்தில் கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை

Must read

டில்லி:

‘ஒரு அடர் லவ்’ என்ற மலையாள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியரின் முகபாவனை காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலானது. அதிலும், பிரியா கண்ணடிக்கும் காட்சி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.

சமூக வலை தளங்களில் பிரியாவின் கண்ணடிக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்களின் வெளிப்பாட்டை சித்தரிக்கும் வீடியோக்கள், மீமிஸ்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்துள்ளனர்.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி வீரர் லுங்கி நிஜிதி.யில் வீடியோவும் இணைக்கப்பட்டு காதலர் தின சிறப்பு பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் வைரலாகியுள்ளது. இதில் லுங்கி நிஜிதி.யும் டேக் செய்யப்பட்டுள்ளார். இதை நிஜிதியும் ஷேர் செய்துள்ளார்.

[embedyt] https://www.youtube.com/watch?v=RJFDaFMnwjw[/embedyt]

More articles

Latest article