பாஜக மூத்த அமைச்சர்கள் மீது பெண் பரபரப்பு புகார்…வீடியோ வெளியீடு

Must read

டில்லி:

பாஜக மூத்த அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தும் பெண்ணின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ காட்சியில் பேசும் அந்த பெண் தனது பெயர் பாபி என்று கூறி அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த காட்சி சமூக வலை தளமான டுவிட்டரில் பரவி வருகிறது. அவர் பாஜக மூத்த அமைச்சர்கள் குறித்து பேசுகிறார்.

அவரது வீடியோ பேச்சு அந்த குறிப்பிட்ட 2 அமைச்சர்களின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாஜக தலைமையிலான ஆடசிக்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வீடியோ டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ரசிகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் டுவிட்டர் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ உண்மையா?, சித்தரிக்கப்பட்டதா? என்பது உறுதி செய்யப்படவில்லை. அந்த வீடியோவில் இரு அமைச்சர்களும் இதை மீடியாக்களுக்கு கொடுத்துவிடுவேன் என்று அச்சமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை வழங்கும்படி காங்கிரஸ் தரப்பில் இருந்து பல கோடி ரூபாம் பேரம் பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் பேச்சு பாஜக.வின் இரு அமைச்சர்கள் மீதும் தீவிர அவதூறும் ஏற்பட்டும் வகையில் உள்ளது. இதனால் பெரும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=cBVOfi7MQMc[/embedyt]

More articles

Latest article