சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் பிப்ரவரி 13-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பாடலை சென்னை விமான நிலையத்தில் வைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.