ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் அமிர்தா ராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் கமல் – காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது.

இதற்காக ஈவிபி அரங்கில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்கள்.

தற்போது அந்த அரங்கில் கமல் – காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரங்கில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில் கமல் – காஜல் அகர்வால் இருவரும் பங்கேற்கும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை முதலில் காட்சிப்படுத்துகிறார்கள்.