தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து பின் நடிகையாக உருவாகிவரும் பட்டியல் மிக நீளமானது .

அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் மணிமேகலை அப்பட்டியலில் சேர்ந்துள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமாகியுள்ளார் மணிமேகலை. “எனக்கு வராத துறை. நடிப்பில் ஒரு சின்ன அறிமுகம்” என்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.