2020ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் முழு விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை கொரியதிரைப்படமான  “PARASITE” திரைப்படம் பெற்றுள்ளது. அததுடன்  மேலும் 3 விருதுகளையும் தட்டிச்சென்றுள்ளது.

உலக திரைத்துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும், 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில்  வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்த திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. ஜோக்கர், பேரசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் சிறந்த படங்களுக்கான நாமினேஷனில் இடம்பெற்றன.

இதில்,  சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை கொரிய திரைப்படமான பாராசைட் ( “PARASITE”) பெற்றது. மேலும்,  Once upon a time in Hollywood படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் பெற்றுள்ளார். சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது

“The Neighbours Window”. “Toy story 4”-க்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

விருது பெற்றவர்கள் விவரம்:

சிறந்த நடிகர்: வாக்கீன் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரீனிஜீல்வீகர் (ஜூடி)

சிறந்த படம்: பாராசைட்

சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: பிராட்பிட்

சிறந்த சப்போர்ட்டிங் நடிகை: லாரா டெர்ன்

சிறந்த இயக்குனர்: பாங்கூன் ஜோ (பாராசைட்)

சிறந்த டாக்குமெண்டரி படம்: அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: டொனால்ட் சில்வஸ்டர்

சிறந்த பாடல்: லவ் மி அகைன்

சிறந்த சர்வதேச படம்: பாராசைட்

சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த குறும்படம்: ஹேர்லவ்

சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்: பாங்ஜூன் ஹோ மற்றும் ஜின்வோன்ஹான் (பாராசைட்)

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: தி நெய்பவர்ஸ் விண்டோ

சிறந்த புரடொக்சன் டிசைன்: ஒன்ஸ் அப் ஆன் இன் ஹாலிவுட்

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமென்)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: மார்க் டெய்லர் மற்றும் ஸ்டார்ட் வில்சன் (1917)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரோகர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த எடிட்டர்: மைக்கேல் மக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லாண்ட்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ரோச்சரான், கிரேக் பட்லர், டாமினிக் தோய்

சிறந்த மேக்கப்மேன்: காஜூ ஹிரோ, அன்னி மோர்கான் மற்றும் விவியன் பேக்கர்

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில்  பாராசைட் படம் நான்கு விருதுகளையும், 1917 மற்றும்  மூன்று விருதுகளையும், ஜோக்கர் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.