புதுடெல்லி:
5 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

5 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சர் அசோக் சவான் தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், மணீஷ் திவாரி, வின்சென்ட் பாலா மற்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் தோல்விகள் குறித்த அறிக்கையை இந்தக் குழு இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கவுள்ளது.

கேரளம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.