இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அவசியம் ; நிபுணர் குழு

Must read

டில்லி

கொரோனா மூன்றாம் அலை  பரவல் தொடங்கும் முன்பு இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவலால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.  இதுவரை 2.33 கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் 2.54 லட்சத்துக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர். சுமார் 1.94 கோடி பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 37 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலைத் தாக்கம் விரைவில் தொடங்கலாம் எனவும் அப்போது பரவலின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   மூன்றாம் அலை பரவல் நேரத்தில் அதிக அளவில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  எனவே நிபுணர்கள் மூன்றாம் பரவலுக்கு முன்பு 12 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மேலும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை நடத்த அனுமதி அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

More articles

Latest article