சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அகில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு  இன்று பிறந்தநாள். அதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிறந்தநாளை தனது மகன் ராகுல்காந்தியுடன் கொண்டாட சோனியா ராஜஸ்தான் சென்றுள்ளார். இதன் காரணமாக இன்று ராகுல் நடை பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதுபோல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் UPA தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக வாழ்த்துக்கள் என  பதிவிட்டுள்ளார்.