சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆண்டிறுதி தேர்வு முடிவுற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது. இருந்தாலும், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே , சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில், இதுவரையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட புதிய குழந்தைகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டட்டுளளனர்.
அதன்படி, மே மாதத்துக்குள் இது 7 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது
[youtube-feed feed=1]