சென்னை: படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை  என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி  234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்தது. இந்த  வாக்குப்பதிவானது இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதுபோல மாநில தலைநகரான சென்னையில் மட்டும், 83.70 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாவட்​டத்​தில்  மொத்த 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில்,   வாக்குப்பதிவுக்கா சுமார் 4,085 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டன./ இந்த தேர்தலில் 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம். 419 பேர் போட்​டி​யிட்​டனர்.

சென்னையின் 16 தொகுதிகளிலும் சேர்த்து,   28.93 லட்​சம் பேர் வாக்​களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணை யதகவல்கள் தெரிவித்தன. ஆனால்,   மொத்​தம் 24,22,097 (83.71 சதவீதம்) பேர் வாக்​களித்​துள்ளனர். ஆண்​களில் 84.05 சதவீதம் பேரும் (11.73 லட்​சம்), பெண்​களில் 83.40 சதவீதம் பேரும் (12.48 லட்​சம்), மூன்​றாம் பாலினத்​தவரில் 58.53 சதவீதம் (508 பேர்) பேரும் வாக்​களித்​துள்​ளனர். அதே நேரத்​தில் 4.71 லட்​சம் பேர் இந்த தேர்​தலில் வாக்​களிக்​க​வில்​லை.

அதோவது, சுமார் 4 லட்சம் பேர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றாதது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமாக, பொதுமக்கள் வாக்களிக்க தேவையான  போதிய போக்​கு​வரத்து வசதி செய்யப்படவில்லை என்றும், முதியோர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவதில், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பல முதியோர்கள், உடல்நலம் பாதிப்பு காரணமாக வாக்களிக்க முன்வரவில்லை என்றும், பலர் ஆட்சியாளர்களின் அவலமான செயல்கள், அதிகாரிகளின் எதேச்சதிகாரனமான நடவடிக்கை போன்றவற்றால் மனம் வெறுத்து, யார் ஆண்டால் நமக்கு என்ன என்ற மனநிலையில், வாக்களிப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]