சென்னை:  மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சென்னை-பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ள தாகவும், இதன் காரணமாக  10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் ஒயிட்ஃபீல்ட் ரயில் நிலையங்களில் யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான ரயில் போக்குவரத்து சேவை மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரையில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – மைசூரு வழித்தடங்களில் இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 3 முதல் ஜூலை 7 வரையிலான குறிப்பிட்ட தேதிகளில் சென்னை சென்ட்ரல் – அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் மறுமார்க்க ரயில், சென்னை – பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் மெயில், யஷ்வந்த்பூர் – சென்னை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், மைசூரு – சென்னை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையேயான மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 7ம் தேதியன்று ஜோலார்பேட்டை – கே.எஸ்.ஆர் பெங்களூரு மெமு ரயில் தேவனகொந்தி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் தவிர, மே 29, ஜூன் 2, 7, 19, 23 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் மைசூரு – ரேணிகுண்டா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், எஸ்.எம்.வி.டி பெங்களூரு – நியூ தின்சுகியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாட்டியா – பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நீண்ட தூரம் செல்லும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதனால் மைசூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ், எஸ்.எம்.வி.டி பெங்களூரு – கவுகாத்தி எக்ஸ்பிரஸ், தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ஆகிய ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய முக்கிய நிலையங்களுக்குச் செல்லாமல் மாற்று வழியில் இயங்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]