சிவகாசி: தமிழ்நாட்டில் சிமென்ட் உள்பட கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகஅரசின் வலிமை சிமென்ட் 59 ஆயிரம் டன் விற்பனை ஆகி உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டில் சிமென்ட் விலை உயர்வுக்கு திமுக அரசுதான் காரணம், இதன்மூலம் ரூ.1500 கோடி கமிஷன் பெறுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், தமிழக தொழிழ்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்,  விருதுநகர் மாவட்டம்,  ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன அரவை இயந்திரம் அமையும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய சிமென்ட் அரவை இயந்திரம் அமைக்கும் பணி நிறைவு பெற்ற பிறகு சிமென்ட் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2.75 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 5.6 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். தமிழக அரசின் வலிமை சிமென்ட் இதுவரை 59 ஆயிரம் டன் விற்பனை ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சிமென்ட் நிறுவனங்களால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு