சென்னை: சென்னையில் நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையில், டேம்பர்டு சைலன்சர் பொருத்திய 103 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசு உத்தரவை மீறி தவறான முறையில் நம்பர் பிளேட் பொருத்திய 821 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

சென்னையில் இருச்சக்கர வானங்கள் அதிகரித்துள்ள நிலையில், பலர் காதை கிழிக்கும் வகையில், சைலன்சர்கள் பொருத்திக்கொள்வதும், அரசு உத்தரவை மீறி விதவிதமாக நம்பர் பிளேட்களை பொருத்தும் நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றனர். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை சென்னை மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாகவும் (Defective Number Plates), குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கி விதி மீறல்களில் ஈடுபடும் போதும் விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்வது அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து நேற்ற சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், சென்னையில் அதிக ஒலியை ஒழும்பும், டேம்பர்டு சைலன்சர் பொருத்தப்பட்ட 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட் குறைபாடுகள் இருந்தது தொடர்பாக 291 வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,  சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தவும், பிழையான பதிவெண் தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நேற்று (01.05.2022) அன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை வாகனம் இயக்கியதாக 09 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முறையில் நம்பர் பிளேட் பொருத்திய 821 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.