தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல், ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் .

இந்தநிலையில், நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர்.