அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்து, அதனை இன்று சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினி மோகன் பாபுவின் வீட்டிற்கு சென்ற போது இந்த செல்பியை லட்சுமி மஞ்சு எடுத்திருக்கலாம் என தகவல் . ரஜினி விரும்பி செல்லும் வீடுகளில் ஒன்று மோகன் பாபுவினுடையது.

அண்ணத்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துள்ளன. படக்குழு சென்னை திரும்பியதும் ரஜினி சென்னையில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேச உள்ளார். நவம்பரில் தீபாவளி வெளியீடாக அண்ணாத்த திரைக்கு வரவுள்ளது.