விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அர்ச்சனா, வாவ் லைப் எனும் அவரது சேனலில் தனது மகள் ஸாராவுடன் இணைந்து பிசியாகி விட்டார் .

சமீபத்தில், ’பாத்ரூம் டூர்’ என்ற பாத்ரூம் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ ஒரு பக்கம் அதிக பார்வையாளர்களை பெற மறுபுறம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

அர்ச்சனா வெளியிட்டிருந்த பாத்ரூம் வீடியோவை பிற யூ-ட்யூபர்ஸ் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் பலரும் அர்ச்சனாவின் குழந்தை, குடும்பம் என அனைவரையும் விமர்சித்ததால், காப்பி ரைட் பிரச்னையாகி, அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

‘பாத்ரூம் டூர்’ என்ற பெயரைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்றால் அதை அமைதியாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால், அதை ட்ரோல் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். நான் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்த வீடியோக்கள் அனைத்துமே தரக்குறைவான விமர்சனங்களை வைத்தவைதான்” என்கிறார் அர்ச்சனா.