சோனியா அகர்வால் நடிப்பில் தமிழ், மலையாளத்தில் கிராண்ட்மா என்ற ஹாரர் படம் தயாராகிறது. சோனியா அகர்வாலுடன் ஸ்ரீதா சிவதாஸ், ஹேமந்த் மேனன், மாலா பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை சிஜின் லால் இயக்குகிறார்.

ஜிஎம்ஏ ஃபிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயக சுனில் ஆகியோர் கிராண்ட்மாவை தயாரிக்கிறார்கள். ஷ்யாம் அம்பாடி ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதையை ஷிபி எழுதியுள்ளார்.

கிராண்ட்மாவின் பர்ஸ்ட் லுக்கை நடிகை விமலா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இதுபோன்ற படங்களுக்கு தடையில்லாமல் கிடைக்கிறது.