ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இந்தப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்திருக்கும் சிவகார்த்திகேயன் முதல்முறையாக நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.