15/01/2022: சென்னையில் 8,978பேர் உள்பட தமிழ்நாட்டில் இன்று 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 8,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், மொத்த பாதிப்பு 231 ஆக தொடர்கிறது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை 5,94,07,735 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,43,536 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு29,15,948 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று மேலும் 10,988 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,47,974 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில், கொரோனாவுக்கு  இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,967 ஆக உயர்ந்துள்ளது.  இன்று உயிரிழந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 04 பேரும், அரசு மருத்துவமனையில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும்   1,31,007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் சென்னையில்,  இன்று ஒரே நாளில் 8,978 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,34,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 323 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 254.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்72
செங்கல்பட்டு2,854
சென்னை8,978
கோவை1,732
கடலூர்353
தருமபுரி168
திண்டுக்கல்89
ஈரோடு542
கள்ளக்குறிச்சி120
காஞ்சிபுரம்697
கன்னியாகுமரி659
கரூர்76
கிருஷ்ணகிரி297
மதுரை550
மயிலாடுதுறை51
நாகப்பட்டினம்47
நாமக்கல்240
நீலகிரி283
பெரம்பலூர் 68
புதுக்கோட்டை 71
ராமநாதபுரம் 135
ராணிப்பேட்டை 283
சேலம் 427
சிவகங்கை 110
தென்காசி 21
தஞ்சாவூர் 443
தேனி162
திருப்பத்தூர் 163
திருவள்ளூர்1,478
திருவண்ணாமலை315
திருவாரூர்73
தூத்துக்குடி 355
திருநெல்வேலி 175
திருப்பூர் 667
திருச்சி443
வேலூர் 304
விழுப்புரம் 169
விருதுநகர்319

 

ஒமிக்ரான் பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், மொத்த பாதிப்பு 231 ஆக தொடர்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 231 பேரும் குணமடைந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 144 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டனர்.  மொத்தம் 29 மாவட்டங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

More articles

Latest article