பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் பிரபாகர்

Must read

மதுரை:
பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார்.

மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தற்போது 5வது சுற்று முடிவு வரை 6 மாடு உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள் மற்றும் 7 மாடுபிடி வீரர்கள், ஒரு போலீஸ் என மொத்தம் 17 பேர் காயமடைந்துள்ளனர்

இந்நிலையில், 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. சிறப்பாக களமாடும் காளைக்கு, கன்றுக்குட்டியுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article