சென்னை,

மிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல் அரசியல் குறித்த பதிவுக்கு, அரசியலுக்கு வர முயன்ற சிவாஜியே  மக்கள் புறக்கணித்தனர்… கமல் எம்மாத்திரம் என்று அமைச்ச்ர ஓ.எஸ்.மணியன் கூறினார்.

கமலின் அரசியல் பதிவுக்கு தமிழக அமைச்சர்கள் சரமாரியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய டுவிட்டில் கமல், தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறி இருந்தார். தமிழகத்தில் நடைபெற்றும் ஊழல் குறித்து தமிழக அமைச்சர்களின் மெயிலுக்கு ஆன்லைன் மூலம் அனுப்புங்கள் என்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமலின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்,

அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க முயன்ற  நடிகர் சிவாஜியையே மக்கள் புறக்கணித்தார்கள் என்றும், கமலுக்கு தற்போது படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏதும் இல்லை. அதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறார் போலிருக்கிறது என்று கிண்டலாகவும்,  அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்.

ஏனென்றால் அரசியல் களம் என்பது செவாலியே விருது பெற்ற சிவாஜியையே கண்ட களம்.

இவ்வாறு அவர் கூறினார்.