பெங்களூரு,

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து,  சிறையில் அனுபவித்து வந்த வசதிகள் குறித்து டிஐஜி ரூபா பரபரப்பான தகவல்களை வெளியிட்ட உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சொகுசாக வாழ்ந்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார  சிறையை ஆய்வு செய்த சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவின் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை  கண்டுபிடித்து, அதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி. அதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகளை அடியோடு மாற்றியும், உயர்நிலை விசாரணை குழு அமைத்தும் விசாரணை செய்து வருகிறது கர்நாடக அரசு.

இந்நிலையில், சிறைத்துறையில் இருந்து பெங்களூர் போக்குவரத்துறை கமிஷனராக மாற்றப்பட்ட டிஐஜி ரூபா, மேலும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

அதில்,  சிறையில் 150 அடி நீள தாழ்வாரம் உண்டு. அதில் வரிசையாக இருந்த 5 அறைகள் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நடு அறையில் அவருக்காக கட்டில், மெத்தை இருந்தன. எல்.இ.டி. டி.வி.யும் இருந்தன. சொந்தமாக நிறைய ஆடைகள் வைத்திருந்தார்.

தவிர பயன்பாட்டில் இல்லாத அலுவலக அறையையும் சசிகலா பயன்படுத்தி வந்தார். அதில் சுழலும் நாற்காலி இருந்தது. எதிரில்  இருக்கைகள் இருந்தன.

பொதுவான சமையலறையில் அவருக்காக தனியாக சமையல் செய்யப்பட்டது. .மருத்துவரின் பரிந்துரைகள்  ஏதும் இல்லாத நிலையில் அவருக்கு தனியாக சமைத்து தந்தது சரியா?

தவிர, கைதிகள் நிரம்பி வழியும் சிறையில் ஒருவருக்கு மட்டும் 5 அறைகள் தருவது சரியா?

சிறையில் கைதிகள் பார்வையாள்ரகள் சந்திக்கும் இடத்தில் ஏழு சி்சி டிவி காமிராக்கள் உள்ளன.  அதில் பார்வையாளர்களை சசிகலா சந்திக்கும் காட்சி பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் பதிவாகியிருக்காது.

சசிகலாவுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை.  சிறையில் நடைபெறும் விதி மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கத்துடனே செயல்பட்டேன்” என்று ரூபா தெரிவித்தார்.