சென்னை,

மிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று  கமல் டுவிட் செய்தது முதல், அவர்மீது தமிழக அமைச்சர்கள் பலர் சரமாரியாக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கமலின் நேற்றைய டுவிட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கமல் ரசிகர்களை தூண்டி விடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கமல் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்களும், கமல் முதுகெலும்பில்லாதவர் என்று எச்.ராஜா போன்ற   பாரதியஜனதா கட்சி தலைவர்களும் கமலுக்கு எதிராக வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தினர்.

இந்நிலையில், நேற்றைய டுவிட்டில், கமல், தான் ஏற்கனவே இந்தி எதிர்ப்பு குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்ததுவிட்டதாகவும், இது குறித்து தம்பி ஜெயகுமார், எச்.ராஜா போன்றோர் தனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அனுப்புங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், டில்லி செல்லும் வழியில் விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கமலின் அரசியல் குறித்த டுவிட்டுக்கு பதிலளித்தார். அப்போது, ஏக் துஜே கேலியே என்ற இந்தி படத்தில் நடித்து இந்தி எதிர்ப்பு சுதந்திர போராட்ட வீரர் கமல் அவர்களுக்கு வாழ்த்துகள்.

எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று எதைப்பற்றி பேசினார் என்று பார்த்தால் எதை குறித்துமே பேசவில்லை. கமல் யாருடைய ஊதுகுழலாகவோ  இருக்கிறர்.

ஆதாரம் இருந்தால் வழக்கு போடட்டும். ஆதாரமில்லை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கண்ணியமாக பேச வேண்டும் என்று அவரது  ரசிகர்களை தூண்டி விடுகிறார்.  இப்பிரச்சனையில் கமல், ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.