கலபுரகி:
ஞ்சாபில் காங்கிரஸ் நிலைமை சீராகும் என்று ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கிரஸ் உயர் மட்ட குழுவில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாபில் அரசியல் நிலைமை சீராகும் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒரு மாதமாக நான் பஞ்சாபின் கட்சி பிரிவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். நான் ஒரு அறிக்கையை காங்கிரஸ் உயர் மட்ட குழுவிடம் சமர்ப்பித்து உள்ளேன். இதனால், பஞ்சாபில் அரசியல் நிலைமை சீராகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை, “என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நல்லுறவை ஏற்படுத்த, மூன்று பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவுக்கு கார்கே தலைமை தாங்கினார்.

அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கட்சியை விட்டு வெளியேறிய பிறகு பஞ்சாப் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், அமரீந்தர் தனக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களை அணுகி, அவர் தனக்கென ஒரு புதிய கட்சியை உருவாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மாநிலத் தேர்தல்களில் நவ்ஜோத் சிங் சித்துவின் தோல்வியை உறுதி செய்வதே தனது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இருக்கும் என்பதையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மேலும் பேசிய கார்கே, தலித் தலைவர் சன்ரஞ்சித் சிங் சன்னியை பஞ்சாப் முதல்வராக நியமித்த காங்கிரஸ் தலைவரின் செயலுக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரசின் இந்த நெருக்கடியான நேரத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பஞ்சாபின் முதல்வராக சன்னியை ஆக்கியதற்கு நாம் பாராட்ட வேண்டும். இது ஒரு துணிச்சலான முடிவு என்றும் அவர் கூறினார்.