பஞ்சாப்: 
சித்துவை கலந்தாலோசித்த பிறகு  புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.
டிஜிபி இக்பால் ப்ரீத் சிங் சஹோட்டா மற்றும் அட்வகேட் ஜெனரல் (ஏஜி) அமர் ப்ரீத் சிங் தியோல் ஆகியோரின் நியமனங்கள் “பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் உப்பு தேய்ப்பது போன்றது” என்று சித்து டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு சித்துவை கலந்தாலோசித்த பிறகு  புதிய காவல்துறை டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சன்னி,  அரசாங்கம் மற்றும் பிசிசி இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்காக ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
இந்த குழுவின் பரிந்துரைகளின் படியும்,  சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய டிஜிபி நியமிக்கப் படுவார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சித்து டிஜிபி மற்றும் அட்வகேட் ஜெனரலை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.