உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : சீதாராம் யெச்சூரி

Must read

டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.

கடந்த வாரம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிள் நால்வர் திடீரென வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர்.    அந்த சந்திப்பின் போது முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு வழக்கும் தங்களிடம் ஒப்படைக்கப் படுவதில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக புகார் அளித்தனர்.

தற்போது அந்த  சர்ச்சை ஓய்ந்து விட்டதாக கூறப்பட்டாலும் அதிகார பூர்வமாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை.   இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை என தோன்றுகிறது.   இப்போது மத்திய அரசு தலையிட்டு தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.    தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை  பாராளுமன்றத்தில் கொண்டு வருவது பற்றி எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்”  என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article